Loading...
மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட உருக்கமான கடிதம்: இன்றே உண்ணாவிரதத்தை முடிக்க 3 நிபந்தனைகள்
மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட உருக்கமான கடிதம்

மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட உருக்கமான கடிதம்: இன்றே உண்ணாவிரதத்தை முடிக்க 3 நிபந்தனைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 20, 2026
07:53 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் 21 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை மோசமடைந்ததால் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தற்போது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து ஆதரவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இன்று (ஜூலை 20, திங்கள்) நாடாளுமன்றத்தை நோக்கி திட்டமிடப்பட்டிருந்த பேரணி நடைபெறவுள்ள நிலையில், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க 3 முக்கிய நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார். அவை நிறைவேற்றப்பட்டால், இன்றே உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அவர் கூறியுள்ளார்.

நிபந்தனைகள்

சோனம் வாங்சுக் விதித்துள்ள 3 நிபந்தனைகள்

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு மத்திய அரசு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.

முதலாவது நிபந்தனையை அரசு ஏற்கத் தவறினால், அவரும் CJP தலைவர்களும் நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று, அங்குள்ள பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் தலைவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும். அங்குள்ள தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவதாக பாராளுமன்ற ஜனநாயகத்தின் முறைப்படி தங்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் தாம் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து, கல்வித் துறை முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்ற உறுதியைத் தனக்கு வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT