
தனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
செய்தி முன்னோட்டம்
ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் சரசபதி கிராமத்தில் வசிப்பவர் சாரதா.
70 வயதாகும் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகனான கருணா வீட்டில் சாரதா வசித்து வந்த நிலையில், சமீபத்தில் கருணா உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, இவரது இளைய மகன் சஸ்துருகன் சாரதா வசிக்கும் அதே கிராமத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அவ்வாறு சரசபதி கிராமத்தில் வசிக்கும் சஸ்துருகனுக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் அவர் தனது தோட்டத்தில் தற்போது காலிபிளவர் பயிரிட்டுள்ளார் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே சாரதா நேற்று(டிச.,24)சமையல் செய்ய தனது இளைய மகன் தோட்டத்தில் இருந்து ஒரு காலிபிளவரை பறித்துள்ளார்.
தாக்குதல்
வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை துவங்கியுள்ளது
இதுகுறித்து அறிந்த சஸ்துருகன் தனது தாயார் மீது கடும் ஆத்திரம் கொண்டுள்ளான்.
அந்த ஆத்திரத்தில் தனது தாயாரை கடுமையாக தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.
எனினும், ஆத்திரம் அடங்காத சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை தங்கள் வீட்டின் அருகேயுள்ள மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளான்.
அதேசமயம் தனது மாமியாரை காப்பாற்ற முயற்சித்த தனது மனைவியையும் அவன் தாக்கியதோடு, 'யாரேனும் தடுக்க வந்தால் அவர்களையும் தாங்குவேன்' என்று மிரட்டல் விடுத்துள்ளான்.
இறுதியில், ஒருவழியாக ஊர் மக்கள் ஒன்றுக்கூடி சாரதாவையும், சஸ்துருகனின் மனைவியையும் மீட்டுள்ளனர்.
தனது மகனால் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதா தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில்,
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர்.