சென்னையில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் டெக்னாலஜி அறிமுகம்; விரைவில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த திட்டம்
தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் சேவைகளை தடையின்றி தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சமாளிக்க முதற்கட்டமாக சென்னை போக்குவரத்துத்துறை, ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலேயே முதல்முறை எனவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில், அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போது, அங்கிருக்கும் சிக்னலில் எச்சரிக்கை செய்யுமாம். இதன் மூலம், வாகனஓட்டிகளும் சுதரிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது, முதற்கட்டமாக 16 சிக்னல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிக்னல்களுடன், 25 ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, இத்திட்டத்தினை, சென்னையில் உள்ள, 40 சிக்னலிகளில் விரிவுப்படுத்த சென்னை போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.