இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை
இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் கொத்தடிமை தனத்தில் அவதிப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இந்திய மாணவர்கள் அச்சம் ஏற்படும் வகையான சூழல் இருந்தால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம், அந்நாட்டின் வடக்கு வேல்ஸ் நகரில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் காப்பகம் ஒன்றினை நடத்தி, 50 இந்திய மாணவர்களை நவீன கொத்தடிமைத்தனத்திற்கு ஆளாக்கி தொழிலாளர்கள் என்ற பெயரில் சுரண்டலில் ஈடுபட்ட சம்பவம் தான் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் நலனுக்காக உள்ள ஜி.எல்.ஏ.ஏ. என்னும் தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான அமைப்பு சமீபத்தில் ஓர் செய்தியினை வெளியிட்டுள்ளது. அதில் தொழிலாளர் சுரண்டலில் ஈடுபட்ட அந்த 5பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஊதியத்தை சரிவர கொடுக்காமலும், ஊதிய பணத்தை பிடித்துவைத்தும் கொடுமை
இதனைதொடர்ந்து அந்த காப்பகம் நடத்திய கேரளாவை மாத்யூ ஈசாக்(32), ஜீனுசெரியன்(30), எல்தவுஸ் சூரியச்சன்(25), எல்தவுஸ் செரியன்(25), ஜேக்கப் லிஜு(47) ஆகிய 5பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் நடத்திவரும் காப்பகங்களில் இந்திய மாணவர்களை வேலைக்கு சேர்த்து கொடுமைப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். வேலைக்கு சேர்த்த பின்னர், ஊதியத்தை சரிவர கொடுக்காமலும், ஊதிய பணத்தை பிடித்துவைத்து கொள்வதுமாக 14மாதங்களாக இருந்துள்ளார்கள். மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் கடும் பசியோடு, மிக சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு மீதமடைந்த உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் துர்நாற்றம் வீசப்பட்டது என்று அரசு விசாரணை அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி 5ஆண்டுகள் வரை சிறைதண்டனை அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.