Page Loader
கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி
கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி

கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி

எழுதியவர் Arul Jothe
May 30, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் பிரபல பாடகி சின்மயி முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தார். சின்மயி & 17 பெண்கள் சேர்ந்து பதிந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்து பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார் . "பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்" என்று முதலமைச்சரை குறிப்பிட்டு கூறியிருந்தார். மேலும் "போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் பாலியல் குற்றச்சாட்டு குறைந்தபாடிலை என்றும் உங்கள் நண்பர் & ஆதரவாளரான கவிஞர் வைரமுத்து மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Singer Chinmayi

சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி

"தமிழ் திரைத்துறையில் 5 ஆண்டுகள் வேலை செய்ய தடையுடன் 2018-19-ம் ஆண்டிலே சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன்". "அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று இப்போது வரை தெரியவில்லை. இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் கூட எதிர்கொள்ள பலம் உள்ளது". "அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத ஒருவருக்கு நியாயம் கிடைக்க இத்தனை நாட்கள் ஆகும்தான் போல" என்று அந்த பதிவில் கூறினார். அதோடு, திரைத்துறையில் போக்சோ, ஐசிசி அமைப்புகள் சரியாக செயல்பட ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post