முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது?
செய்தி முன்னோட்டம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
மக்களவை, மாநில சட்டசபைகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.
இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
டக்ஜ்வ்
அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு
இந்த கூட்டத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் உறுப்பினர்கள் ஆன, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி-ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனால், இதன் உறுப்பினரான மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தனக்கு இந்த குழுவில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று அவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கொள்கை குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடமும், மக்களால் தேர்தடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட கட்சிகளிடமும், சட்ட ஆணையத்திடமும் கருத்து கேட்க இந்த குழு இன்று முடிவு செய்துள்ளது.
அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்ட பிறகு இந்த குழு மீண்டும் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.