
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அவருக்கு எதிரான 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை, 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடங்கிய ட்ரங்கு பெட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே அவரது நீதிமன்ற காவல் அக்.20ம் தேதி முடிவடைந்த நிலையில் காணொளி காட்சி மூலம் புழல் சிறையில் இருந்தவாறு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரது நீதிமன்ற காவல் நவ.22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதன்படி அவரது காவல் இன்றோடு நிறைவடையும் நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆஜர்
அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல்
இதனையடுத்து அவரது நீதிமன்ற காவலை டிசம்பர் 4ம்.,தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இத்துடன் 11வது-முறையாக இவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டப்பொழுது கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமர்பிக்காமல் உள்ளது என்றும்,
அந்த ஆவணங்களை தங்களிடம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான பதில் மனுவினை இன்று(நவ.,22)அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் இவ்வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை வரும் டிசம்பர்.4ம்.,தேதி நடக்கும் என்று கூறி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
செந்தில் பாலாஜி
#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
— Thanthi TV (@ThanthiTV) November 22, 2023
* ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்
* ஜூன் 14ஆம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 வது… pic.twitter.com/u2zyLVV5x1