Page Loader
நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி  

நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி  

எழுதியவர் Sindhuja SM
Jul 21, 2024
06:46 pm

செய்தி முன்னோட்டம்

நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்த அடைப்புகள் காரணமாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு, தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஒரு வருடமாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ICU வார்டில் செந்தில் பாலாஜி