Page Loader
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி 
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி 

எழுதியவர் Nivetha P
Sep 20, 2023
06:05 pm

செய்தி முன்னோட்டம்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 15ம் தேதி நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் வந்தது. அப்போது நீதிபதி அல்லி இது குறித்த தீர்ப்பினை வரும் 20ம் தேதி அறிவிப்பதாக கூறி வழக்கினை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

விசாரணை 

உடல்நிலையை ஒரு காரணமாக கருதி ஜாமீன் வழங்கக்கூடாது - அமலாக்கத்துறை வாதம் 

இந்நிலையில் இன்று(செப்.,20) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்த வழக்கினை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி தற்போது வரை நீடித்து வருகிறார். மேலும் இவர் செல்வாக்கு மிகுந்த நபராக கருதப்படுவதால் இவருக்கு ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் சாட்சியங்கள் கலைக்க படலாம் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முன்னதாக கோரியிருந்தது. மேலும், உடல்நிலையை ஒரு காரணமாக கருதி அவருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அமைச்சரை ஜாமீனில் விடுவிப்பது ஏற்புடையதல்ல என்றும் அமலாக்கத்துறை சார்பில் முந்தைய விசாரணையின் பொழுது வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.