NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா
    இந்தியா

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா
    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023, 03:54 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று(மார்ச்.,31) உயர்கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. முன்னதாக கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜா கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், மதுரையில் எந்த தொழிலும் இல்லை. இந்த நிலையில் மெட்ரோ ரயில் வந்து என்ன பயன்? எல்லோரும் பாராட்டும் வகையில் தொழில்துறை அமைச்சர் ஒரு தொழிலை கொண்டுவர வேண்டும். மதுரை மக்கள் அவரை ஆஹா ஓஹோ என்று பாராட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மதுரையில் ரூ.600கோடியில் டைடல்பார்க் விரைவில் அமைக்கப்படும்

    செல்லூர் ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மக்கள் அனைவரும் அண்ணன் செல்லூர் ராஜூவை ஆஹாஓஹோ என்று கூறுகிறார்கள். நானே அசந்து போய்விட்டேன். சில நாட்களுக்கு முன்னர் ஒரு புகைப்படம் வந்தது. நாம் எல்லாம் புலியை பார்த்தால் ஓடிவிடுவோம். மதுரை மக்கள் மாட்டைத்தான் பிடிப்பார்கள். ஆனால் செல்லூர் ராஜு புலியின் வாலை பிடித்து வந்துள்ளார். மதுரைக்காரர்கள் விவரமானவர்கள். அண்ணன் செல்லூர் ராஜு புலியின் வாய் இருக்கிற பக்கம் பிடிக்காமல், வால் இருக்கிற பக்கம் பிடித்துள்ளார் என்று பேசினார். மேலும் மதுரையில் ரூ.600கோடியில் டைடல்பார்க் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியஅவர், தொழில் முதலீடுகள் தென்மாவட்டங்களில் சமமாக, சீரான முறையில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    இந்தியா

    தமிழ்நாடு

    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு! வாகனம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை கோலிவுட்
    ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள் கோலிவுட்

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை பஞ்சாப்
    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி டெல்லி
    இந்தியாவில் ஒரே நாளில் 3,095 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு கொரோனா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023