Page Loader
சுய மரியாதை திருமணம்: காதலர் தினத்தன்று திருநம்பியை கரம்பிடித்த பெண்
சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட அருணா தேவி மற்றும் அருண் பாஷ்

சுய மரியாதை திருமணம்: காதலர் தினத்தன்று திருநம்பியை கரம்பிடித்த பெண்

எழுதியவர் Sindhuja SM
Feb 14, 2023
06:22 pm

செய்தி முன்னோட்டம்

காதலர் தினத்தை முன்னிட்டு தன் காதலியை அருண் பாஷ் என்ற திருநம்பி சுய மரியாதை திருமணம் செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பெண் அருணாதேவி, தன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் காதலர் தினமான இன்று தன் காதலர் அருண் பாஷை சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், கேரளாவை சேர்ந்த ஒரு திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்தது பரவலாக பேசப்பட்டது. நம் நாட்டிலேயே ஒரு திருநம்பிக்கு குழந்தை பிறப்பது அதுவே முதல் முறை என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த திருமணம் நடந்திருக்கிறது. இது போன்ற திருமணங்கள் பலராலும் போற்றப்பட்டாலும் சிலர் இன்னும் தூற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

ட்விட்டர் அஞ்சல்

காதலர் தினத்தில் தன் காதலியை மணமுடித்த திருநம்பி