Page Loader
கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி
இந்த உலகில் எங்கள் நாட்கள் முடிந்த பிறகும் எங்களை நினைவு கூற ஒரு நபர் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்: ஜியா பவல்

கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி

எழுதியவர் Sindhuja SM
Feb 04, 2023
04:23 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த திருநர்களான ஜஹாத் மற்றும் ஜியா பவல் தம்பதி தங்களுக்கு முதல் குழந்தை பிறக்க போவதை அறிவித்தது இன்ஸ்டாகிராமில் ஆனந்த கூச்சலை அதிகரித்திருக்கிறது. நடனக் கலைஞரான ஜியா பவல், தனது துணைவரான திருநம்பி ஜஹாத் தற்போது எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் மார்ச் மாதம் தங்களுக்கு முதல் குழந்தை பிறக்க இருக்கிறது என்றும் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். "தாயாக வேண்டும் என்ற எனது கனவையும், தந்தையாக வேண்டும் என்ற அவனது கனவையும் நாங்கள் நனவாக்க உள்ளோம். எனக்கு தெரிந்து இதுவே இந்தியாவில் பதிவாகும் முதல் திருநம்பி கர்ப்பமாகும்"என்று பவல் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளார். ஜியா 'உடலால்' ஆணாகப் பிறந்து பெண்ணாகவும், ஜஹாத் 'உடலால்' பெண்ணாக பிறந்து ஆணாகவும் மாறிவர்கள் ஆவர்.

Instagram அஞ்சல்

இன்ஸ்ட்ராகிராமில் தாங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட தம்பதி