Page Loader
கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை 
கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2023
03:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் நாளையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை என அம்மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, நாளை, திருவள்ளுர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யவுள்ளது.

embed

செங்கல்பட்டு மாவட்டத்தில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு#Chengalpet #rainalert #Dinakarannews pic.twitter.com/ytXdjLDxao— Dinakaran (@DinakaranNews) November 24, 2023