உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 03) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 03) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
சரவணம்பட்டி துணை மின்நிலையம்:
சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தாபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர்.