LOADING...
தமிழக மின்தடை அலர்ட்: நாளை ஜூன் 24 உங்க ஏரியாவில் பவர் கட் இருக்கா? முழு லிஸ்ட்!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழக மின்தடை அலர்ட்: நாளை ஜூன் 24 உங்க ஏரியாவில் பவர் கட் இருக்கா? முழு லிஸ்ட்!

எழுதியவர் Vasuki
Jun 23, 2026
12:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக, மின்வாரியம் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 24, புதன்கிழமை) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அல்லது பராமரிப்பு பணிகள் முடியும் வரை அந்தந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை, குறிப்பாக குடிநீர் சேமிப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை 

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் மாவட்டம்: காமராஜபுரம், கே.வி.பி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள். கோயம்புத்தூர் மாவட்டம்: அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம்: யமுனா நகர், கணுவாய், கலப்பநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), ஜி.சி.டி நகர், கே.என்.ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் காலனி. மயிலம்பட்டி (மெட்ரோ) துணை மின் நிலையம்: காரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகொளம்பாளையம், வெங்கட்டாபுரம்.

 மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஆனைமலை (அங்கலக்குறிச்சி) துணை மின் நிலையம்: அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேதுமடை, டாப்சிலிப், பரம்பிகுளம், பரமடையூர், பி.என்.னூர், எம்.ஜி.னூர், சோமந்துரைச்சித்தூர், என்.எம் சுங்கம், ஆழியாறு, நஞ்சனைக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், காம்பளப்பட்டி, சீலோன் காலனி. குனியமுத்தூர் துணை மின் நிலையம்: குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புத்துவிக்கி. மலையடிபாளையம் துணை மின் நிலையம்: பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மாலாபாளையம், வடவேடம்பட்டி, வாதாம்பச்சேரி, மந்திரிபாளையம். தர்மபுரி மாவட்டம்: பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னாம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகரை, நெருப்பூர், நாதசப்பட்டி, தாசம்பட்டி, பிக்கிலி, காடமடை, ஆலமரத்துப்பட்டி, வாதலாபுரம். தஞ்சாவூர் மாவட்டம்: காரம்பயம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மதியம் வரை மின் விநியோகம் தடைபடும்.

Advertisement