Page Loader
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு 
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

எழுதியவர் Nivetha P
May 16, 2023
12:07 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த அதிமுக ஆட்சியில் 2011ம்ஆண்டு முதல் 2015ம்ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து காவல்துறையில் பணி வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் திருப்பி கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்வதாகவும் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தர்மராஜ், ஒய் பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அமைச்சர் 

சிறப்பு விசாரணை குழு அமைப்பு 

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவினை ரத்து செய்து, தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பானது மனுத்தாக்கல் செய்தது. அதேபோல் சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை இன்று(மே.,16) நீதிபதிகள் அமர்வு சிபிசிஐடி-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை முடித்து வைத்தனர். பின்னர் அமலாக்கத்துறையின் மனுவினை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் விசாரணை குழு அமைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.