
'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
செய்தி முன்னோட்டம்
சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட சுற்றறிக்கையினை திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் வெளியிட்டதற்கு எதிரான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சேஷாயி விசாரித்து வந்தார்.
அதன்படி இன்று(செப்.,16) இதன் விசாரணையினை முடித்து வைத்த அவர், சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை, இந்துக்களின் நித்திய கடமைகள், பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த கடமைகள் அனைத்தும் அழிக்கத்தக்கவையா? என்றும், நாட்டுக்கு சேவை செய்வது கடமை இல்லையா? குடிமகன் தனது நாட்டினை நேசிக்க கூடாதா? என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
சனாதனம்
தீண்டாமையை சகித்து கொள்ள இயலாது - நீதிபதி
இதனை தொடர்ந்து அவர், "சாதியவாதத்தையும் தீண்டாமையையும் சனாதனம் ஊக்குவிப்பதாக ஓர் கருத்து உள்ளது. அனைத்து குடிமகன்களும் சமமானவர்களே. அதே போல் இந்நாட்டில் தீண்டாமையினை சகித்து கொள்ளவும் முடியாது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், மதம் சார்ந்த பழக்க வழக்கங்கங்களில் சில மோசமான நடைமுறைகள் செயல்பாட்டில் இருந்தாலும் அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்கான பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
கருத்து சுதந்திரம் என்று கூறி மற்ற ஒருவரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.