Page Loader
கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை
கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு

கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2023
03:01 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. வைகை ஆணை கொள்ளளவை ஏறியதால், உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதனால், மதுரை நகரில் வைகை நதியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் ஆகிய இடங்களில் வைகை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், முன்னெச்சரிக்கையாக மதுரை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளை அந்த சாலைகளில் பயணிக்க தடை விதித்துள்ளனர். மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு