
ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு!
செய்தி முன்னோட்டம்
ஈக்விஃபேக்ஸ் மற்றும் ஆண்ட்ரோமெடா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் சில்லறைக் கடன் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன.
அந்த ஆய்வில் வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து கடந்த ஒரு ஆண்டில் (2022) மட்டும் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிற்கு 34 லட்சம் வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
மேலும், கடந்த ஆண்டில் தனிப்பட்ட கடன் பிரிவு 57% வளர்ச்சியடைந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 2022 நிலவரப்படி சில்லறைக் கடன் சந்தையின் சந்தைமதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக அந்நிறுவனங்களின் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியா
இந்திய கடன் சந்தை:
0-25 லட்சம் அளவிலான கடன்களே 67% வழங்கப்பட்டிருக்கின்றன. 75 லட்சம்-1 கோடி அளவிலான கடன் கடந்த 2022-ம் ஆண்டில் 36% உயர்ந்திருக்கிறது.
கொரோனா காலத்தில் சில்லறை கடன் வழங்குவது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் முந்தைய ஆண்டை விட சில்லறை கடன் வழங்குதல் 40% அதிகரித்திருக்கிறது.
ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் 31 கோடி சில்லறை கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
தனிப்பட்ட கடன்கள் 2021-ம் ஆண்டில் 32% வளர்ச்சியடைந்த நிலையில், கடந்த ஆண்டில் 57% வளர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சில்லறைக் கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளே முன்னணியில் இருக்கின்றன. எனினும், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் 2021-ம் ஆண்டு 78% வளர்ச்சி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.