LOADING...
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு 
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு 

எழுதியவர் Nivetha P
Sep 29, 2023
06:23 pm

செய்தி முன்னோட்டம்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 12ம்தேதி சுமார் 3,000-பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனிடையே செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த நிலையில், அவரது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை முதன்மை நீதிமன்றம். இந்நிலையில் இவரது நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடையும் பட்சத்தில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, இவரது நீதிமன்றக்காவலை வரும் அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

செந்தில் பாலாஜி 

Advertisement