Page Loader
மொபைலை வைத்து சனி கிரகத்தை படம் பிடித்த இந்தியர்: வாயை பிளக்கும் இணையவாசிகள் 
பலர் இதனால் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மொபைலை வைத்து சனி கிரகத்தை படம் பிடித்த இந்தியர்: வாயை பிளக்கும் இணையவாசிகள் 

எழுதியவர் Sindhuja SM
Aug 22, 2023
11:04 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி வானில் தெரிந்த சனி கிரகத்தை ஒரு ரெடிட் பயனர், தனது ஐபோன் 14 ப்ரோவில் படம் பிடித்திருப்பது வைரலாக பேசபட்டு வருகிறது. ரெடிட் பயனரான 'Anime-kungfu' தனது ரெடிட் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ டெல்லியில் வைத்து எடுக்கப்பட்டதாக கூறிய அவர், நேற்று அதிகாலை 1:30 மணியளவில் இந்த விடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்ஓ 12 இன்ச் டாப்சோனியனில் பொருத்தப்பட்ட ஐபோன்-14 ப்ரோவைப் பயன்படுத்தி வீடியோவை எடுத்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்த வீடியோவில் சனி கிரகமும் அதன் வளையங்களும் தெளிவாக தெரிவது மட்டுமல்லாமல், அது அசைவதும் நன்றாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பலர் இதனால் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாக பரவி வரும் சனி கிரகத்தின் வீடியோ