Page Loader
சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் 
சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் 

எழுதியவர் Nivetha P
May 17, 2023
11:48 am

செய்தி முன்னோட்டம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், வங்க கடலில் கடந்த வாரம் மோக்கா புயலானது உருவாகி கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கரையினை கடந்தது. இதன் காரணமாக சென்னை கடற்கரை பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று இல்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார். இதன்படி கடல் காற்றானது கடந்த 15ம் தேதி பிற்பகல் 12.45 மணிக்கு பிறகு தான் மெல்ல வீச துவங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்பம் 

அடுத்த 2 நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் 

தொடர்ந்து நேற்று(மே.,16) பிற்பகல் 1.15 மணிக்கு மேல் ஓரளவு கடல் காற்று வீச துவங்கியுள்ளது. கடல் காற்று வீசாமல் போனதால் தான் வெயிலின் வெப்ப தாக்கமானது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்படுகிறது. அடுத்த 2 நாட்களுக்குமே வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கும். கடல் காற்று தனது இயல்பு நிலைக்கு வீச துவங்கியதும் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார். முன்னதாகவே இது குறித்து வானிலை ஆர்வலர்கள் கூறுகையில், 'அசவுகரியம்' என்னும் வார்த்தைக்கு அர்த்தம், இந்த மோக்கா புயல் கரையை கடந்த பின்னர் வரும் 4 நாட்களுக்கு கொளுத்தவுள்ள வெயில் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.