LOADING...
அனில் அம்பானிக்கு விழுந்த பேரிடி; ரூ. 3,700 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்கியது அமலாக்கத்துறை
PMLA கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அனில் அம்பானிக்கு விழுந்த பேரிடி; ரூ. 3,700 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்கியது அமலாக்கத்துறை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
06:41 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 'அபோட்' என்ற 17 அடுக்கு மாளிகையை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3,716.83 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்(RCOM) நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, அந்த பணத்தை முறைகேடாக திசைதிருப்பியதாக புகார் எழுந்தது. குறிப்பாக, 2017 மற்றும் 2019-க்கு இடையில் யெஸ் பேங்க் (Yes Bank) மூலம் சுமார் ரூ. 3,000 கோடி கடனைப் பெற்று, போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

எஸ்பிஐ

எஸ்பிஐ அதிரடி

பாரத ஸ்டேட் வங்கி (SBI), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் விளம்பரதாரர் அனில் அம்பானியை 'மோசடியாளர்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனில் அம்பானிக்கு எதிராகத் தனிப்பட்ட திவால் நடவடிக்கைகளையும் எஸ்பிஐ தொடங்கியுள்ளது. இதுவரை இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 15,700 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. இந்தியாவின் உயர்மட்டக் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான இந்த நடவடிக்கை வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement