
இந்த முறை ரெப்போ ரேட்டில் மாற்றம் கொண்டு வருமா ரிசர்வ் வங்கி?
செய்தி முன்னோட்டம்
இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டமானது கடந்த டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த அறிவிப்பை இன்று (நவம்பர் 8) காலை 10 மணிக்கு வெளியிடவிருக்கிறது ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நான்கு முறை ரெப்போ ரேட்டின் மாற்றம் செய்யாமல், 6.5% ஆகவே தொடர்ந்து வருகிறது ரிசர்வ் வங்கி. இந்நிலையில், இந்த முறையும் அதனை அப்படியே ரிசர்வ் வங்கி தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று அறிவிப்பு:
#RBI MEET: Will the #MPC maintain the status quo and keep rates steady for the fifth consecutive time?
— Zee Business (@ZeeBusiness) December 8, 2023
Watch Video: https://t.co/D7TxPkAE8m@RBI