Page Loader
பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்
அத்தியாவசிய பொருட்களை அன்று வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம்

பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2024
06:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி அனைத்து நியாயவிலை கடைகளும் இயங்கும் எனவும், அத்தியாவசிய பொருட்களை அன்று வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை. ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து நியாயவிலைக்கடைகளும் இயங்கும்" என்று தெரிவித்துள்ளார். அன்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றும், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post