LOADING...
அயோத்தி கோவிலில் ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: பிரதிஷ்டை விழா நிறைவு

அயோத்தி கோவிலில் ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: பிரதிஷ்டை விழா நிறைவு

எழுதியவர் Sindhuja SM
Jan 22, 2024
12:31 pm

செய்தி முன்னோட்டம்

அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், மதியம் சரியாக 12:30:35 மணிக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை திறந்து வைத்தார். அபிஜித் முஹூர்த்தத்தின் போது மதியம் 12:29:03 முதல் 12:30:35 மணி வரை இருக்கும் மங்களகரமான 84 வினாடிகளில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனினும், இதற்கான பிற சடங்குகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. அதற்கு பிறகு, பார்ப்பனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பூசாரிகள் மந்திரங்களை உச்சரிக்க 'பிரான் பிரதிஷ்டா' விழா ராமரின் பிரார்த்தனையுடன் தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பிரதிஷ்டை விழாவின் போது பிரதமர் மோடியின் அருகில் அமர்ந்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ராமர் சிலை

ட்விட்டர் அஞ்சல்

 பிரதிஷ்டை சடங்குகளில் கலந்து கொள்ள கோவிலுக்குள் நுழையும் பிரதமர் மோடி 

ட்விட்டர் அஞ்சல்

பஜனைகள் பாட ராமர் சிலைக்கு தீபாராதனை 

ட்விட்டர் அஞ்சல்

ராமர் சிலை முதல் தரிசனம் 

ட்விட்டர் அஞ்சல்

ஆர்எஸ்எஸ் தலைவருடன் பூஜைகள் செய்த பிரதமர் மோடி 

ட்விட்டர் அஞ்சல்

ராமர் சிலையின் பாதாதிகேசம் வரையிலான காட்சி