
"பகவான் ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை": அயோத்தி கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி பூரிப்பு
செய்தி முன்னோட்டம்
ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாசம் செய்யமாட்டார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உருக்கமான உரையின் போது கூறினார்.
ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தருணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, தனக்கு தொண்டை அடைப்பதாகவும், தனது உடல் இன்னும் நடுங்குவதாகவும் கூறினார்.
அயோத்தி ராமர் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார்.
அதன் பிறகு, பார்ப்பனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி இதை கூறியுள்ளார்.
டக்ஜ்வ்
அயோத்தி ராமர் கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி கூடிய சில முக்கிய வரிகள்:
பல தலைமுறை காத்திருப்புக்குப் பிறகு இன்று நம் ராமர் திரும்பிவிட்டார். இந்த இனிய சந்தர்ப்பத்தில், அனைவருக்கும் வாழ்த்துகள். சொல்ல நிறைய இருக்கிறது ஆனால், என் தொண்டை அடைக்கிறது.
பகவான் ராமர் இனி கூடாரத்தில் இருக்க தேவையில்லை. அவர் இனி அற்புதமான கோவிலில் குடி இருப்பார்.
ஜனவரி 22, 2024 என்பது ஒரு தேதி மட்டுமல்ல, அது ஒரு புதிய சகாப்தத்தின் வருகையைக் குறிக்கிறது.
ராமர் கோவிலுக்கான சட்டப் போராட்டம் பல தசாப்தங்களாக நீடித்தது. அதன் பிறகு, நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாகரிலிருந்து சரயு வரை பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சாகர் முதல் சரயு வரை, ராமரின் பெயர் ஒரே மாதிரியான உற்சாக உணர்வுடன் போற்றப்படுகிறது.