
ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதல் ஆளுநர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக சி.ஆர்.கேசவன் அவர்கள் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில் அவர், தான் 2001ல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வர காரணம் தேசத்திற்கு சேவை செய்ய தான் என்றும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய மறுமலர்ச்சியை காண வந்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக இக்கட்சியில் பணியாற்றினாலும் மதிப்புமிகு அடையாளத்தினை பெறமுடியவில்லை.
அதனால் இனியும் இக்கட்சியில் இணைந்து செயல்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் வேறுஎந்த கட்சியினருடன் பேசவில்லை என்றும், நேர்மையாகவே அடுத்து என்ன காத்திருக்கிறது என்றும் தனக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல்
That a promising young man from the lineage of Rajaji — a rare leader of his time who wasn't impressed by communist economics — went to a socialist, anti-market party was ironic in the first place. https://t.co/jMA97dHrm2
— Surajit Dasgupta (@surajitdasgupta) February 23, 2023