NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 
    இந்தியா

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023 | 06:36 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு 
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

    தமிழ்நாடு மாநிலம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.200 என்று விற்கப்படுவதாக தெரிகிறது. இதனை கேட்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். இஞ்சி மட்டுமில்லை பீன்ஸ், எலுமிச்சம் பழம் உள்ளிட்டவைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. சென்னையில் இயங்கி வரும் மொத்த விலை காய்கறி அங்காடிகளை கொண்ட கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் வந்து இறங்குகிறது. இந்நிலையில் தற்போதுள்ள கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும், காய்கறிகளின் வரத்து குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதுமானவிலை கிடைக்காததால் சாகுபடி நிறுத்தம் 

    மேற்கூறப்பட்ட காரணங்களால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒரு கிலோ பீன்ஸ், எலுமிச்சைப்பழங்கள் அனைத்தும் கிலோவுக்கு ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.300க்கும்,எலுமிச்சைப்பழங்கள் ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு-மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒருவார காலமாகவே இஞ்சி ஒரு கிலோ ரூ.200க்கும்,பீன்ஸ் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார். இதுதொடர்பாக இஞ்சி வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதுமானவிலை கிடைக்காததால் இஞ்சி சாகுபடியினை பல விவசாயிகள் நிறுத்திவிட்டார்கள். அதனால் தான் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது என்று கூறினார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு

    சென்னை

    தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை இந்தியா
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! செயற்கை நுண்ணறிவு
    லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை லைகா
    லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்  கோவை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்  திருவண்ணாமலை
    சென்னை தலைமை செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்  தமிழக அரசு
    வேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம்  போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023