
ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை
செய்தி முன்னோட்டம்
293 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(CRS), இந்த விபத்து சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதத் தவறினால் ஏற்பட்டது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு இதற்கு காரணம் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விபத்தில் கிரிமினல் சதி உள்ளதா என்பதை ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில்வே வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
கிவ்க்
போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை ஊழியர்கள் பின்பற்றவில்லை: அறிக்கையில் தகவல்
அதற்கு பிறகு, விதிகளின்படி பின்பற்ற வேண்டிய போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல், அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்களின் தவறே இந்த மிகப்பெரும் ரயில் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சிக்னலிங் பிரிவு ஊழியர்கள் மட்டுமல்லாது, ரயில்வே வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை ஊழியர்களுக்கு தெளிவாக சொல்லாத மற்றவர்களின் புறக்கணிப்பும் இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் மீது அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
கடந்த மாதம், கொல்கத்தா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒடிசாவில் விபத்துக்குள்ள்னாது.
இந்த விபத்தில் 293 பேர் கொல்லப்பட்டனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.