Page Loader
சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை
சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனை

சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை

எழுதியவர் Nivetha P
Dec 27, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார். அதில் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அரசு செலவுகளில் அலுவலர்களை பயன்படுத்தியதாகவும், தனியே நிறுவனங்கள் துவங்கியதாகவும் கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், காவல்துறை தற்போது ஜெகநாதனை கைது செய்தது. அதனையடுத்து அவர் இன்று(டிச.,27)காலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு இவருக்கு 7 நாட்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதுடன், அந்த ஒருவார காலமும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்புடைய 7 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெகநாதனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

7 இடங்களில் சோதனை