நீட் தேர்வு முறைகேடுகள்: நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரை கடுமையாக சாடிய ராகுல் காந்தி
நீட் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சாடியதால் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. "நீட் தேர்வில் மட்டுமல்ல, அனைத்து முக்கியத் தேர்வுகளிலும் நமது தேர்வு முறையில் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரிகிறது" என்று ராகுல் காந்தி கூறினார். "அமைச்சர்(தர்மேந்திர பிரதான்) தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்குப் புரியவே இல்லை என்று நான் நினைக்கவில்லை." என்று ராகுல் காந்தி கல்வி அமைச்சரை கடுமையாக சாடினார். இந்திய தேர்வு முறையின் நேர்மை குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.
இந்திய தேர்வு முறையை பணம் இருந்தால் வாங்கலாம் என்ற நிலை உள்ளது
மேலும், மில்லியன் கணக்கான மாணவர்கள் இதை மோசடி என்று நம்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். "பணக்காரனாக இருந்தால், பணம் இருந்தால், இந்திய தேர்வு முறையை வாங்கலாம் என்று கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். இதே உணர்வுதான் எதிர்கட்சியினருக்கும் உள்ளது," என்று அவர் கூறியுள்ளார். மேலும், நீட் சிக்கலை சரிசெய்ய நீங்கள் சரியாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி மத்திய அரசையும் ராகுல் காந்தி சாடியுள்ளார். ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் பிரதான், கடந்த ஏழு ஆண்டுகளில் தேர்வுத்தாள் கசிவு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறினார். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளதாகவும், என்டிஏவுக்கு கீழ் 240க்கும் மேற்பட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.