மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி தவறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்திருக்கும் நிலையில், மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின் ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தியின் தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சத்தியமே எனது கடவுள்: ராகுல் காந்தி
"உண்மையையும் அகிம்சையையும் அடிப்படையாகக் கொண்டது தான் எனது மதம். சத்தியமே எனது கடவுள், அகிம்சை அதைப் பெறுவதற்கான வழிமுறையாகும்." என்ற மகாத்மா காந்தியின் வாக்கியத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயர் எப்படி வந்தது?" என்று 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி கூறி இருந்தார். இதற்காக பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தான் இப்போது வந்திருக்கிறது.