2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா?
செய்தி முன்னோட்டம்
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
26 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான INDIA கூட்டணி குறித்து பேசிய அவர், அனைத்து கட்சிகளும் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.
INDIA-கூட்டணியின் அவசியம் குறித்து பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலிலும் உள்ளூர் விஷயங்கள் தேர்தலை கடுமையாக பாதிக்கின்றன, அதனால் நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் மிகப்பெரிய அழுத்தம் உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் பெங்களூருவில் வைத்து INDIA-கூட்டணி கட்சிகள் சந்தித்ததில் இருந்து பாஜக பயத்தில் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
பிரதமர் மோடி "திமிர்பிடித்தவராக" இருக்கக் கூடாது என்றும் கெலாட் கூறினார்.
சிபிள்கஃஜா
'2024 தேர்தல் முடிவுகள் யார் பிரதமர் என்பதை தீர்மானிக்கும்': அசோக் கெலாட்
"2014-ல் 31 சதவீத வாக்குகள் பெற்று பாஜக ஆட்சிக்கு வந்ததை வைத்து பிரதமர் மோடி ஆணவத்துடன் இருக்கக் கூடாது. மீதமுள்ள 69 சதவீத வாக்குகள் அவருக்கு எதிராக தான் இருந்தது"என்று கெலாட் கூறினார்.
அதன் பிறகு, 2024 பொதுத்தேர்தலில் 50% வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி(பாஜக கூட்டணி கட்சிகள்) ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக கூறப்படுவது குறித்து பேசிய அவர், "பிரதமர் மோடியால் அதை ஒருபோதும் சாதிக்க முடியாது. மோடி புகழின் உச்சத்தில் இருந்தபோதே, அவரால் 50 சதவீத வாக்குகளை பெற முடியவில்லை. அவரது வாக்கு சதவீதம் குறையும், 2024 தேர்தல் முடிவுகள் யார் பிரதமர் என்பதை தீர்மானிக்கும்" என்று கூறினார்.