LOADING...
விரைவில் ஹைட்ரஜன் குண்டு; வாக்குத் திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட உள்ளதாக ராகுல் காந்தி தகவல்
வாக்குத் திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட உள்ளதாக ராகுல் காந்தி தகவல்

விரைவில் ஹைட்ரஜன் குண்டு; வாக்குத் திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட உள்ளதாக ராகுல் காந்தி தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2025
06:34 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டு குறித்த காவல்துறை விசாரணைக்குத் தேவையான தகவல்களை அளிக்க மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். கேரளாவின் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் மீண்டும் தகவல்களைக் கோரியும், அது வழங்கப்படவில்லை என்றார். இது தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு என்று கூறிய ராகுல் காந்தி, இந்த சம்பவம் வெளிப்படையாக, எழுத்துப்பூர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆதாரங்கள்

விரைவில் புதிய ஆதாரங்கள் வெளியிட உள்ளதாக ராகுல் காந்தி தகவல்

மேலும், காங்கிரஸ் கட்சி விரைவில் ஒரு ஹைட்ரஜன் குண்டு போன்ற ஆதாரங்களை வெளியிடும் என்றும், இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடிதான் தேர்தலில் வெற்றிபெற இந்த முறைகேட்டில் ஈடுபட்டார் என்று யாருக்கும் சந்தேகம் இல்லாத வகையில் நிரூபிப்போம் என்றும் கூறினார். இந்திய ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பவர்களைத் தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது என்று ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். முன்னதாக, கர்நாடகாவில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால், தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று நிராகரித்தது.