ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெறலாம்: டெல்லி நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், எம்பி சலுகைகளை இழந்தார்.
ராகுல் காந்தி தனது இராஜதந்திர பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைத்ததை அடுத்து, வெளிநாடுகளுக்கு பயணிக்க அவருக்கு சாதாரண பாஸ்போர்ட் தேவைப்பட்டது.
ராகுல் காந்தி பணமோசடி மற்றும் நிதி முறைகேடு தொடர்பான நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால், சாதாரண பாஸ்போர்ட்டை வாங்க அவருக்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியாமாக இருந்தது.
ராகுல் காந்திக்கு எதிரான பணமோசடி வழக்கு பாஜக முன்னாள் எம்பி சுப்ரமணிய சுவாமியால் தாக்கல் செய்யப்பட்டதாகும்.
இதனையடுத்து, அவர் டெல்லி நீதிமன்றத்தை அணுகினார்.
அவரது கோரிக்கையை கேட்ட டெல்லி நீதிமன்றம், ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று இன்று(மே 26) அனுமதி வழங்கி உள்ளது.
details
சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது
கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் வைபவ்-மேத்தா, "பயணம் செய்வதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும். அனுமதி பெறாமல் பலமுறை ராகுல் காந்தி பயணம் செய்திருக்கிறார், அதற்கு நீதிமன்றங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை. 2015 டிசம்பரில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியபோது, நீதிமன்றம் அவரது பயணத்திற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது." என்று கூறியுள்ளார்.
ஆனால், ராகுல் காந்திக்கு 3 வருடத்திற்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டும். 10 வருடத்திற்கு வழங்கப்பட கூடாது என்றும் மாஜிஸ்திரேட் கூறி இருக்கிறார்.
குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார்.