
மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்ட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அன்றைய தினம் ராகுல் காந்தி அவர்கள் ஸ்ரீ பெரும்பத்தூர் சென்று ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இதற்கிடையே நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், அதன் பதவியேற்கும் விழாவினை வரும் மே 20ம் தேதி நடத்துகிறது.
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்கவுள்ளார்.
துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்கவுள்ளார்.
பிற்பகல் 12.30 மணியளவில் நடக்கும் இந்த பதவியேற்பு விழாவில் முன்னதாக கலந்துகொள்ளும் ராகுல் காந்தி, அதன்பின்னரே சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#RahulGhandi #RajivGandhi #DinakaranNews ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி https://t.co/y8vWRq2Krb pic.twitter.com/fUGkS74J19
— Dinakaran (@DinakaranNews) May 18, 2023