தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்?
தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு விடுமுறை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 20 முதல் 27ஆம் தேதி வரை காலாண்டுத்தேர்வு நடைபெறும் எனவும், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பரீட்சை நிறைவடைந்ததும், 4 நாட்கள் மட்டுமே விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாதத்தில் கூடுதலாக, செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதூர்த்தியும், செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபி என மொத்தம் 2 நாட்கள் விடுமுறை வருகிறது.