Loading...
மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் 'உண்மையான குற்றவாளி அவர் தான்': பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு குறித்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்

மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் 'உண்மையான குற்றவாளி அவர் தான்': பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
01:50 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணையின் போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராகக் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், தவறு செய்த முதன்மை நபர் வேறு ஒருவர் என்றும், அறநிலையத்துறை அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ முதன்மை குற்றவாளிகள் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். சுயநல அரசியல்வாதி ஒருவரின் அழுத்தத்திற்கு அதிகாரிகள் பணிந்தது மட்டுமே அவர்களின் தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விமர்சனம்

அரசியல்வாதி மீதான PTR-இன் விமர்சனம்

குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் விமர்சித்த பி.டி.ஆர், தான் தனது வாழ்நாளில் ஒரே ஒரு அரசியல் கட்சியில் (திமுக) மட்டுமே உறுப்பினராக இருப்பதாக கூறினார்.

ஆனால், சர்ச்சைக்குரிய அந்த நபர் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாறியவர் என்று சாடியுள்ளார்.

கோயில் அறங்காவலர் குழு உரிமைகளுக்காகத் துணிச்சலாகப் போராடிய மூன்று பெண் அறங்காவலர்களின் நடவடிக்கையைப் பி.டி.ஆர் பாராட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் தங்கள் உரிமைகளை நீதிமன்றத்தில் விட்டுக்கொடுத்த ஆண் அறங்காவலர்களுக்கு மத்தியில், சட்டரீதியான உரிமைகளை மீட்டெடுக்க இந்த பெண் அறங்காவலர்களின் உறுதியான நிலைப்பாடே காரணம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த அறிக்கை, ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT