Loading...
SENA நாடுகளுக்கு செல்லும் முன் அதிரடி மாற்றம்! 2027 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ புதிய திட்டம் வெளியீடு
2027 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ புதிய திட்டம் வெளியீடு

SENA நாடுகளுக்கு செல்லும் முன் அதிரடி மாற்றம்! 2027 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ புதிய திட்டம் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
11:01 am

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு, ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கான புதிய ரோட்மேப்பை பிசிசிஐ உருவாக்கி உள்ளது. செப்டம்பர் 3 அன்று மும்பையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா, அடுத்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதத்திற்குள் உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை இறுதி செய்வதே தங்களின் முதன்மை நோக்கம் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

தொடர் தோல்விகள்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர் தோல்விகள் குறித்து ஆய்வு

சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணி அடைந்த தொடர் தோல்விகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

அயர்லாந்தில் டி20 போட்டிகளிலும், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்த மோசமான செயல்பாட்டிற்கான காரணங்களை சுயபரிசோதனை செய்து, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தவிர்க்க தீவிர உத்திகள் வகுக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

SENA நாடுகள்

கேப்டன்கள் பங்கேற்பு மற்றும் சேனா (SENA) நாடுகளுக்கான உத்திகள்

இந்த முக்கியமான கூட்டத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ஷுப்மன் கில், டி20 அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டனர்.

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சேனா (SENA) நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக வலுவான திட்டங்களை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பெரிய தொடர்களுக்கு முன்பாக வீரர்களுக்குப் போதிய ஓய்வு வழங்குவதையும் பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

முதன்மை அணி

2026 இறுதிக்குள் தயாராகும் முதன்மை இந்திய அணி

உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் போதுமான காலம் இருப்பதால், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதன்மை வீரர்களைக் கொண்ட வலுவான அணியைக் கட்டமைக்கப் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அதன்பிறகு வரும் போட்டிகளில் அந்த அணியை மேலும் வலுப்படுத்தி, 2027 உலகக்கோப்பையைக் கைப்பற்றுவதையே இலக்காகக் கொண்டு செயல்படவுள்ளது.

இளம் வீரர்கள் மற்றும் அனுபவமிக்க வீரர்களை சரியான முறையில் களமிறக்கச் செய்வதன் மூலம் இந்திய அணியின் கோப்பை கனவு நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT