Loading...
ஈ-காமர்ஸ் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் தளர்வு: ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் நீக்கம்
ஈ-காமர்ஸ் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் தளர்வு

ஈ-காமர்ஸ் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் தளர்வு: ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் நீக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிகளில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒரு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, அந்நிய முதலீடு பெற்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சொந்தமாக இருப்பு வைக்கும் (Inventory-based Model) நடைமுறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2 நாளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிக்கையின் மூலம் அந்நியச் செலாவணி மேலாண்மை விதிகளில் இந்த புதிய மாற்றம் சேர்க்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தை

உள்நாட்டுச் சந்தைக்கான கட்டுப்பாடுகளில் மாற்றமில்லை

இந்த புதிய தளர்வானது பிரத்யேகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியத் தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவிற்குள் இருக்கும் நுகர்வோருக்கு நேரடியாகப் பொருட்களை விற்பனை செய்யும் B2C (Business-to-Consumer) வர்த்தகத்திற்கு இந்த இருப்பு வைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

உள்நாட்டுச் சந்தையில் இயங்கும் சில்லறை வணிகர்கள் மற்றும் சிறிய கிரானா கடைகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த பழைய கட்டுப்பாடுகள் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே தொடர்ந்து நீடிக்கின்றன.

சர்வதேச வாய்ப்புகள் 

இந்திய பிராண்டுகளுக்கு சர்வதேச அளவில் புதிய கதவுகள்

மத்திய அரசின் இந்த இருமுனை கொள்கை முடிவானது இந்திய உற்பத்தியாளர்களுக்கு உலகளாவிய அளவில் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும்.

சர்வதேச அளவில் இயங்கும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி ஈ-காமர்ஸ் தளங்களின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, இந்தியத் தயாரிப்புகளை நேரடியாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும்.

இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான சர்வதேச சந்தை விரிவடைவதுடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

விதிமுறைகள்

நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள்

இந்த சலுகையைப் பயன்படுத்தும் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தாங்கள் இருப்பு வைத்துள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையும், அவை வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதையும் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

இதில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தற்போதைய அந்நிய முதலீட்டு சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும்.

ADVERTISEMENT