Loading...
ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி: மாணவி உயிரிழப்பு, மாணவர் தற்கொலை முயற்சி; கல்லூரிக்கு விடுமுறை
இச்சம்பவங்களால் அச்சமடைந்த கல்லூரி நிர்வாகம், மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது

ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி: மாணவி உயிரிழப்பு, மாணவர் தற்கொலை முயற்சி; கல்லூரிக்கு விடுமுறை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
11:16 am

செய்தி முன்னோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில், அடுத்தடுத்த நாட்களில் இரு மாணவர்கள் கட்டிட மாடிகளில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்களால் அச்சமடைந்த கல்லூரி நிர்வாகம், மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இச்சம்பவங்கள் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தத் தொடர் அசம்பாவிதங்கள் பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி பலி

காதல் விவகாரத்தால் 5-வது மாடியிலிருந்து குதித்த மாணவி பலி

சில தினங்களுக்கு முன் பூந்தமல்லியைச் சேர்ந்த ஷெரின் (19) என்ற மாணவி இக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு AI & ML படித்து வந்தார்.

காதல் விவகாரம் தொடர்பாகப் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தாயாரின் கண்டிப்பால் மன உளைச்சலில் இருந்த மாணவி ஷெரின், கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்த அதிர்ச்சி

அடுத்த நாளே 3-வது மாடியிலிருந்து குதித்த மாணவர்

இச்சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், அதே கல்லூரியில் ECE இரண்டாம் ஆண்டு படித்து வந்த சசிதரன் (19) என்ற மாணவர் நேற்று மதியம் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

கைகால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட அம்மாணவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறைந்த வருகைப்பதிவு காரணமாக பேராசிரியர் விளக்கம் கேட்டதால், வகுப்பறையிலிருந்து வெளியேறி மாணவர் இம்முடிவை எடுத்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

நடவடிக்கை

கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்களால் அச்சமடைந்த கல்லூரி நிர்வாகம், மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தத் தொடர் அசம்பாவிதங்கள் பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(குறிப்பு: தற்கொலை எண்ணம் எழுந்தால் அல்லது மன உளைச்சல் இருந்தால் மாநில உதவி எண் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்).

ADVERTISEMENT