LOADING...
தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எழுதியவர் Nivetha P
Aug 28, 2023
11:09 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிஎஸ்டிபி) உயர்ந்துள்ளது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டு நேற்று(ஆகஸ்ட்.,27) X-தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "தேசிய சராசரியினை விஞ்சிய சராசரி, தமிழக மாநிலத்தின் பெரும் பெருமிதம்" என்று குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர், "திராவிட மாடல் கழகமானது தமிழகத்தில் ஆட்சி செய்ய துவங்கியதிலிருந்து தமிழகம் புதிய உயரங்களுக்கு இட்டு செல்கிறது. கடந்த 2 நிதியாண்டுகளில் தமிழகம் 8% என்னும் சிறப்பான பொருளாதார வளர்ச்சியினை அயராத முயற்சிகளால் உறுதி செய்துள்ளது" என்றும் கூறியுள்ளார். இந்த உயர்வு, இந்திய பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாக தமிழகத்தினை நிலைநிறுத்தியுள்ளது என்றும் அவர் பதிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

தமிழ்நாடு 

பணக்கார மாநிலங்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்த தமிழ்நாடு 

மேலும், தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்குள் நமது இலக்கான ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்பதனை அடைய இந்த உயர்வு ஓர் அடித்தளமாக அமைந்துள்ளது என்பதனையும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த ஜூலை மாதம், ஒவ்வொரு மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்திகளின் அடித்தளமான 2022-23ம் ஆண்டின் பணக்கார மாநிலங்கள் என்னும் பட்டியல் வெளியாகியுள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி அந்த பட்டியலில் தமிழ்நாடு மாநிலம் 2ம் இடத்தினை பிடித்திருந்தது. இதற்கிடையே இந்தியா பரப்பளவில் 11ம் பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் 7ம் இடத்தினை பிடித்த பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.