முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி
செய்தி முன்னோட்டம்
பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரித்துறை 'ஆய்வு' நேற்று(பிப் 16) இரவு முடிவடைந்தது.
இந்த ஆய்வின் போது வருமான வரித்துறையினர் ஆவணங்களை சார்பார்த்ததாகவும் கணினிகளில் இருந்த தரவுகளை அவர்கள் நகல் எடுத்து வைத்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டரில் இந்த செய்தியை உறுதிப்படுத்திய பிபிசி, அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்போம் என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், பயமோ பாகுபாடோ இல்லாமல் தொடர்ந்து செய்திகளை வழங்குவோம் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால் இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தியா
பிபிசி ஆவணப்படம் பற்றி பேசிய இங்கிலாந்து எம்பி
பிபிசி ஆவணப்படம் பற்றி பேசிய இங்கிலாந்து எம்பி பாப் பிளாக்மேன், இப்படி ஒரு ஆவணப்படம் வெளிவந்திருக்கவே கூடாது என்று கூறியுள்ளார்.
"இது பிபிசியால் ஒளிபரப்பப்பட்டிருக்கவே கூடாது. ஏனெனில் பிபிசிக்கு உலகளவில் நற்பெயர் இருக்கிறது. பிபிசி வெளியிட்டதால் இது உண்மையாக தான் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது பிபிசி மேற்பார்வையில் இன்னொரு அமைப்பால் தயாரிக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது உண்மையல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குஜராத் கலவரத்திற்கான காரணங்களை இது விரிவாக ஆராயவில்லை. நரேந்திர மோடிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்தது என்பதையும் அப்போது அதற்கு சாதகமான எந்த ஆதாரமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதும் அதில் குறிப்பிடப்படவில்லை" என்று அவர் விமசித்துள்ளார்.