Page Loader
தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 
தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு

தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 

எழுதியவர் Nivetha P
Sep 02, 2023
12:15 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் நிறுவன பெயர் பலகையினை தமிழில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவினை மீறும் நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனு மீதான வழக்கின் விசாரணை நேற்று(செப்.,1) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அப்போது தமிழக அரசு சார்பிலான பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

உத்தரவு 

அக்டோபர் 13ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு 

இது குறித்து தமிழக அரசு கூறியதாவது, தற்போதைய நிலவரப்படி தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்களுக்கு ரூ.50 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்த அபராதத்தொகை உயர்த்தப்படும். ரூ.50ஆக உள்ள அபராத தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? என்பது குறித்த விரிவான அறிக்கையினை தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்கும் என்று உத்தரவிட்டுள்ளனர்.