குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முக்கியமான அரங்குகள் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இரண்டு முக்கியமான அரங்குகளில் பெயர்களை மாற்றியுள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இது குறித்து ANI வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' - முறையே 'கணதந்திர மண்டபம்' மற்றும் 'அசோக் மண்டபம்' என மறுபெயரிட்டார் குடியரசு தலைவர் என ராஷ்ட்ரபதி பவன் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஜாம்சம் பொருத்திய அரை தர்பார் ஹால். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இதனை சிம்மாசன அறை என்று அழைக்கப்பட்டது. இந்த அறையில்தான், 1948 ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக சி. ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே தான் தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.