Page Loader
செஸ் உலகக்கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - தமிழக முதல்வர் வாழ்த்து
செஸ் உலகக்கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - தமிழக முதல்வர் வாழ்த்து

செஸ் உலகக்கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - தமிழக முதல்வர் வாழ்த்து

எழுதியவர் Nivetha P
Aug 24, 2023
07:58 pm

செய்தி முன்னோட்டம்

ஃபிடே செஸ் உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு தேர்வான இந்தியா செஸ் ஜாம்பவான் பிரக்ஞானந்தா, உலகளவில் நம்பர் ஒன் பிளேயர் என கூறப்படும் மேக்னஸ் கார்செலுடன் இன்று(ஆகஸ்ட்.,24)இறுதிப்போட்டியில் மோதினார். பெரும் பரபரப்பிற்கு இடையில் நடந்த இப்போட்டியின் முடிவில் மேக்னஸ் கார்செல் ஆட்டத்தை வென்று முதலிடம் பிடித்தார், ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா 2ம் இடத்தினை பிடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர், 'தோல்வியடைந்தாலும் உங்களின் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிக்கிறது' என்றும், 'உங்கள் சாதனையினை கண்டு ஒட்டுமொத்த நாடே பெருமையடைந்துள்ளது' என்றும் கூறியுள்ளார். மேலும் பிரக்ஞானந்தா இப்போட்டியில் வென்ற வெள்ளி பதக்கம் வருங்கால இந்தியாவிற்கு நிச்சயம் ஊக்கமளிக்கும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக முதல்வர் வாழ்த்து