
உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 22) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கன்னியாகுமரி: தக்கலை மார்க்கெட் ரோடு, அண்ணா சிலை, நகராட்சி அலுவலகம், கீழக்கல்குறிச்சி, பருத்தியரை, கொல்லன்விளை.
இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம், பூதலூர் ரோடு, சன்னதி தெரு, மேலவீதி, தெற்குவீதி தெரு, காந்திசிலை, மாதாகோவில் தெரு.
இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி மின்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு நடக்கும் மையங்களில் காலை முதல் மாலை வரை மின்தடை எதுவும் ஏற்பாடாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளது.
மேலும், கோடைகாலத்தில் மின்தடை ஏற்பாடாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்து வருகிறது.