உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஜூன் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை எம்.ஜி. புதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும். திருப்பூர் தேவனூர்புதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, ஏரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும்.