உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (ஜனவரி 15) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
பல்லடம் மின்கோட்டத்தில் உள்ள கலிவேலம்பட்டி 110 கிலோவாட் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கலிவேலம்பட்டி, அண்ணாநகர், பெரும்பாலி, விகாஷினி, ஊஞ்சபாளையம் மற்றும் செம்மிபாளையம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் அன்று மின்தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) மூலம் தமிழ்நாடு முழுவதும் மின்சார சேவைகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) கீழ் உள்ள பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின்சாரம் தடைபடுவது வழக்கம்.
எனினும், தமிழகத்தின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை சமயத்தில் மின்தடை இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்லடம் பகுதியில் மட்டும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், பல்லடம் தவிர வேறு எந்த பகுதியிலும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மின்தடை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.